makkaal neethi mayyam cauvery meet



மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் தலைமையில் ’காவிரியின் நமது குரல்’ என்ற அமைப்பில் அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டம். சென்னையில் தி.நகரில் கமல் தலைமையில் கூடியுள்ளது. 

இதில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன், அய்யக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பா.ம.க இளைஞர் அணி அன்புமணி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பங்கேற்பு, தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ஆம் ஆத்மியின் வசீகரன், அர்ஜூன் சம்பத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முக்கிய கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை.

தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக சார்பிலும் யாரும் கலந்துகொள்ளவில்லை.