ஒன்றுமில்லாத பிரச்சனைக்கெல்லாம் லட்சக்கணக்கான இளைஞர்கள்  போராடுகிறார்கள். ஆனால் டி.என்.பி.எஸ்.சி முறைக்கேடுக்காக யாரும் போராட வருவதில்லை  என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு  மத அடிப்படையில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஆதரவு தருவார்கள் என்றால் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கவேண்டும். ஒன்றுமில்லாத பிரச்சனைக்கெல்லாம் லட்சக்கணக்கான இளைஞர்கள்  போராடுகிறார்கள். ஆனால் டி.என்.பி.எஸ்.சி முறைக்கேடுக்காக யாரும் போராட வருவதில்லை.

 நடிகர் ரஜினியை கண்டு திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் பயப்படுகின்றன. சிஏஏ மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் முழுவீச்சுடன் செயல்படுத்த வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு வரும் எதிர்ப்புகளை கண்டு மத்திய அரசு பின்வாங்காமல், முழுவீச்சுடன் இதனை செயல்படுத்த வேண்டும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.