Asianet News TamilAsianet News Tamil

"ஓபிஎஸ் ட்விட்டர் பக்கத்தில் வேற யாரோ தப்பா பதிவு போட்டுட்டாங்க" - புதுக்கதை விடும் மைத்ரேயன்

maithreyan says that someone posted in ops twitter
maithreyan says that someone posted in ops twitter
Author
First Published May 20, 2017, 12:59 PM IST


டுவிட்டர் பக்கத்தில் கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்கு, மழுப்பலான பதிலை அவரது அணியை சேர்ந்த மைத்ரேயன் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி என ஓ.பி.எஸ். டுவிட்டர் பக்கத்தில் வெளியான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. பின்னர், கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்படும் என மீண்டும் மற்றொரு தகவல் வெளியானது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து ஒபிஎஸ், வெளியிட்ட டுவிட்டர் குறித்து, அவரது அணியை சேர்ந்த மைத்ரேயன் கூறியதாவது:-

இன்று காலை பாஜகவுடன் கூட்டணி என ஓபிஎஸ்சின் டுவிட்டரில் கருத்து வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு பதிவையும் போட்டுவிட்டோம்.

maithreyan says that someone posted in ops twitter

ஓபிஎஸ்சின் டுவிட்டர் பக்கத்தில், யாரோ விஷயம் தெரியாதவர்கள், பதிவு செய்துவிட்டனர் என மழுப்பலான பதிலை கூறினார்.

அரசியல் தலைவர்கள் தங்களது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை, தங்களது கட்சி ஐடி விங்ஸ் பிரிவிடம் ஒப்படைத்துவிடுவார்கள். அவர்கள், தலைவர்களின் அனுமதியில்லாமல், எந்த பதிவும் வெளியிட மாட்டார்கள்.

தற்போதுள்ள குழப்பமான அரசியல் சூழலில், பாஜகவுடன் கூட்டணி என ஓபிஎஸ் டுவிட்டர் பக்கத்தில் விஷயம் தெரியாதவர் யாரோ பதிவு செய்துவிட்டார்கள் என மைத்ரேயன் மழுப்பலாக பேசியது, பொதுமக்களிடையே பெரும் குழப்பத்த ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios