அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது என மைத்ரேயனை கலாய்த்ததால் கட்சியை விட்டே போகும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைவதை குறிப்பிட்டு  நடந்து முடிந்த மக்களவை தேர்லி்ல் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் மைத்ரேயன் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று கருத்து தெரிவித்துள்ளார்.  அதில் அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது. சகிப்புத்தன்மை வேண்டும். எதையும் எதிர்கொள்கிற திறமை இருக்கணும், திராணி இருக்கணும். தைரியம் இருக்கணும். என்னைப் பொறுத்தவரையில் 2011ல் சபாநாயகர் சீட்டில் உட்கார வைத்து ஜெயலலிதா அழகுபார்த்தார். அதன்பிறகு 2012-ல் பதவியிலிருந்து இறங்கினேன், நான் உடனே குழந்தை மாதிரி அழுதேனா? இதெல்லாம் அரசியலில் டேக் இட் ஈஸி பாலிசி இன்று ஒரு நிலைமை இருக்கும். நாளைக்கு ஒரு நிலைமை இருக்கும். நமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். 

அரசியல் சகிப்புத்தன்மை முக்கியம். எமோஷனுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகவே மைத்ரேயனை பேசியது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சமீப காலமாக மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணையப்போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்து மைத்ரேயனிடம் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என்றும் கூறுகின்றனர்.