Asianet News TamilAsianet News Tamil

கைவிட்ட மத்திய அரசு… கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி வாரி வழங்கும் முதலமைச்சர்!

சாகுபடி நடைபெறாத இடங்களிலும் கனமழை பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Maharastra govt announce 10 thousands crores aid for rain affected farmers
Author
Mumbai, First Published Oct 13, 2021, 6:36 PM IST

சாகுபடி நடைபெறாத இடங்களிலும் கனமழை பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பேரலை புரட்டிப்போட்ட மராட்டிய மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கனமழையும் அவ்வப்போது மிரட்டிவருகிறது. வழக்கத்தை விட அதிகமாக கொட்டிய கனமழையால் மராட்டியத்தில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பயிர்களும் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு ஆட்சியில் இருக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

Maharastra govt announce 10 thousands crores aid for rain affected farmers

இந்தநிலையில் மராட்டியத்தில் கனமழையால் பாதிக்கபப்ட்ட விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாகக்ரே, துணை முதலமைச்சர் அஜித் பவார் மும்பையில் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். சாகுபடி நடைபெறாமல் இருந்தாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Maharastra govt announce 10 thousands crores aid for rain affected farmers

அதேபோல், பயிர்கள் சேதமடைந்திருந்தால் ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாயும், நீண்டகால பயிர்கள் சேதமாகியிருந்தால் ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. பேரிடர் கால நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும், அதற்காக காத்துக்கொண்டிருக்காமல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக மராட்டிய அரசு கூறியுள்ளது. இதற்கு விவசாயிகள் உத்தவ் தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios