ஜெயலலிதா ஊழல் வழக்கு 18 வருடம் நீண்டது. அதை ஒரே வருடத்தில் முடித்து ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை பெற்றுக் கொடுத்தவர் குன்ஹா. அந்த வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உச்சநீதிமன்றமும் குன்ஹாவின் உத்தரவு சரியே என்று உத்தரவிட்டது.  அதுபோல இதுவரை சட்டத்திற்கு ஆட்டம் காட்டிவந்த அதே தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தா குன்ஹாவின் பிடியில் ஜெயலலிதா போலவே சிக்கியிருக்கிறார். 

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்யானந்தா, ‘’தாயார் மீனாட்சி தனது பெண்களை வைத்து பெரிய படையை வைத்திருந்தார். மதுரைக்காரர்கள் நாங்கள். அன்போடு இருந்தால் உயிரையே கொடுப்போம். வம்பு செய்தால் உயிரை எடுப்போம். இது இரண்டை தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என சொக்கநாதரிடம் பேசினார் மீனாட்சி.

 

 ஓடி வந்தார் நாரதர். உடைந்து போயிருந்தது வீணை. அவர் ரிஷி ஆயிற்றே. அவரையாவது அடிக்காமல் இருக்கலாமே என்று மீனாட்சியின் படைத்தளபதி சுமதி சொன்னாள். ஆனால், மீடியா போல பொய்யான தகவல்களை சொன்னதால் அடித்தோம் எனக்கூறினார் மீனாட்சி. கைலாயம் வெற்றியை நோக்கி செல்வதாகவும், மதுரை படை பின்னோக்கி செல்வதாகவும் அவர் பரப்பினார்கள். அதனால் அடித்து துவம்சம் செய்தோம் என விளக்கமளித்தார் மீனாட்சி. அதன்பிறகே அவர் மதுரைக்கு வந்தார். சொன்னபடி பெருமான் மதுரைக்கு வந்து அதனுடைய ஞானத்தை அளித்தார். மதுரையில் ஜீவன் முக்த சமுதாயத்தை உருவாக்கி இந்த உலகத்துக்கு அளித்தார்’’ என பேசியுள்ளார்.