மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் குடிமகன் பக்கத்து எல்லையான சிவகங்கைக்கு படையெடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதால் அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு வரிசை கட்டி காத்துக்கிடக்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று  பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 நேற்று முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மருத்துவ பணிகள், மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இறைச்சி, கோழி மற்றும் மீன் மொத்த விற்பனை கூடங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

மதுரையில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்ட எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதி ருகிறது. மதுரைக்கும் சிவகங்கைக்கும் இடையேயான பூவந்தி புலியூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுரை வாசிகளின் குடிமகன்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.