கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது.கொரோனாவை ஒழிக்க உலகநாடுகள் அனைத்தும் அதற்கான உயிர்கொல்லி மருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேளைகளில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மற்ற உலகநாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு. அதிலும் மகாராஷ்ட்ரா தமிழ்நாடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொரோனோ தாக்குதல் உச்சநிலையை அடைந்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 19ம் தேதி முழுஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ளது. சென்னையில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் வேலைக்காக வெளியூர்களில் இருந்து அங்கே கூடியேறிவர்கள் தான். பெரிய அளவில் உயிர்க்கொல்லி யாக கருதப்படும் கொரோனா வைரஸ்க்கு அனைவரும் பயந்து நடுங்கிப்போய் இருக்கிறார்கள். 
டாக்டவுன் போடப்பட்டதில் இருந்து சென்னையில் இருந்து மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு டூவீலர் மூலமாக டாக்ஸி மூலமாக வந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருவதற்கு ஈ.பாஸ் வாங்கினார்களா? என்பது தான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி? சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் 20ஆயிரம் பேர் மதுரைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காணுவதில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் மதுரை எம்பி வெங்கடேசன் குற்றம் சாட்டியிருந்தார்.


இதனைக்கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் டாக்டர் .சரவணன் மூர்த்தி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களது கைகளில் ஒரு நாளைக்கு குறைந்தது 3ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திடு;சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து வந்தவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்து; கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்து என்கிற வாசகம் அடங்கிய பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் பேசும் போது.." மதுரைக்கு பேராபத்து காத்திருக்கிறது. காரணம் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தவர்கள் சுமார் 20ஆயிரம் பேர். அவர்களை பரிசோதனை செய்யவில்லை. அதிலும் அடையாளம் காணவில்லை.ராஜாஜி மருத்துவமனை டீன் லிங்குசாமியிடம் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவரிடம் சரியான பதில் இல்லை. தவறான தகவல்களை தருகிறார். ஆக மாவட்ட நிர்வாகமும் அரசு மருத்துவமனையும் தினந்தோறும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. ஆட்டோவில் விளம்பரம் செய்யுங்கள். வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களை அருகில் இருப்பவர்கள் தகவல் கொடுப்பதற்கான எண்களை தெரிவியுங்கள். மதுரைக்கு வெளியில் பிரமாண்டமான செட் அமைத்து அங்கே கோரண்டைன் மற்று கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.


மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கத்திற்கும் அதிக அக்கறை இல்லை. சுமார்15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை மாவட்டத்தில் சுமார் 800 பேருக்கு தான் பரிசோதனை நடக்கிறது.இப்படியே இந்த பரிசோதனை சென்றால் மதுரை நிச்சயம் சென்னையாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.என்கிறார்.