எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்  கொரோனா ஒழிப்புக்குத் தேவையானது அதிகாரப் பரவல்தானே ஒழிய அதிகார குவிப்பு அல்ல என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், எம்.பி எச்சரித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் மாநிலம், மாவட்டம், நகரம், கிராமம் என எல்லா மட்டங்களிலும் நடந்தேறி வரும் வேளையில் இன்றைய தேவை அதிகார பரவல்தான் என்றார். 

ஆனால் மத்திய அரசு,  அதிகாரக் குவிப்பு செய்து வருகிறது என்றார்,  உதாரணத்திற்கு ,  இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கொரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.  இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கே.  என்றார்,  அரசுக்கு கோரோனா ஒழிப்பிற்கு செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்?  ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50000 கோடி ரூபாய்கள் கிடைக்கும். 

 கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரி சலுகைகளை தேசத்தின் நலனுக்காக திரும்பப் பெற்றால் 1,50,000 கோடிகள் கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கொரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர் மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும். எனவே மத்திய அரசு  இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக இதே கோரிக்கையை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன்   வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.