ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனிடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இருசக்கர வாகனம் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். ஆனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சர்கார் படத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய புகாரில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.