பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவாங்க.. பேட்டியில் இருந்து எஸ்கேப் ஆன மதுரை ஆதீனம் !
Madurai Adheenam : தொழில் வர்த்தக கண்காட்சியை 293 வது மதுரை ஆதீனம் சுவாமிகள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும்.தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்.
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்
பட்டின பிரவேசம்
முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது' என்று கூறினார்.
மதுரை ஆதீனம் இப்படி பேசியிருப்பது அப்போது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு பட்டின பிரவேசம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வெள்ளாளர் மற்றும் முதலியார் சேம்பர் இணைந்து நடத்திய தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?
மதுரை ஆதீனம் பேட்டி
தொழில் வர்த்தக கண்காட்சியை 293 வது மதுரை ஆதீனம் சுவாமிகள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம் பேட்டி கேட்டபோது, அவர் ‘பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவாங்க’ என்று கூறி புறப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிரிப்பை உண்டாக்கியது.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?