அலறவிட்ட தமிழக அரசு, எதிர்த்து அடிக்கும் RSS..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நாளையே விசாரிப்பதாக நீதிபதி உறுதி.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தவுடன் நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தவுடன் நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக காவல்துறைக்கு கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே அதை அனுமதிக்கலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் அதே அக்டோபர் 2ஆம் தேதி, சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலை உருவானது. இதற்கிடையில் ஒரு சில மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார்.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக நீதிபதி இளந்திரையன் முன்பு ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், இதர கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி அளிக்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மட்டும் அனுமதி மறுக்கப் படுவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர். மேலும் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படியுங்கள்: PFIக்கு தடை எதிர்பார்த்த ஒன்று தான்...! - ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பிற்கு தடை எப்போது..? திருமாவளவன்
எனவே அணிவகுப்புக்கு அனுமதி அளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் நீதிபதி முன்பு தெரிவித்துள்ளார், இதைக் கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலாக தமிழக அரசு நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார், ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று நீதிபதி வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்தவுடன் நாளையே அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.