மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 230 இடங்களில் காங்., 114, பாஜக  109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேட்சை 4  இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - பாஜக இரு கட்சிகளும் முயற்சித்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு ., ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கஉள்ளது.

முதலலமைச்சர்  பதவிக்கு, கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, கமல்நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ராகுலின் நெருங்கிய நண்பரான ஜோதிராதித்யா சிந்தியா  ஆகியோர் இடையே  போட்டி நிலவியது. இருவரும், மாநில தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதால், முதலமைச்சராக  யார் தேர்வு செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வு இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.