madhusudhanan calls admk cadres from sasikala team

சென்னை ஆர்,கே.நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், கையில் காசில்லாதவர்களும், நெஞ்சிலே மாசில்லாதவர்களும் தான் ஓபிஎஸ் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் மீது மக்கள் அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள் ஆனால் தினகரன் ரவுடிகளை வைத்து அதிமுகவை நடத்தி வருகிறார் என மதுசூதனன் குற்றம் சாட்டினார்.

அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒன்றாக இணைய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் மாபியா கும்பலை விரட்டியடிக்க ஓபிஎஸ் பக்கம் எல்லோரும் வாங்க!!! என சசிகலா தரப்பினருக்கு மதுசூதனன் அழைப்பு விடுத்தார்.

சட்ட ரீதியாக நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிருபிப்போம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். அதே போன்று ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மதுசூதனன் உறுதிபடத் தெரிவித்தார்.