அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தை அடுத்து ஓபீஎஸ்சுக்கு ஆதரவளித்த அவைத்தலைவர் மதுசூதனன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு செங்கோட்டையன் புதிய அவைத்தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ள சசிகலா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது கட்சியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவைத்தலைவர் மதுசூதனனை கட்சியின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்குகிறேன் இவ்வாறு சசிகலா அறிவித்துள்ளார்.
இதையடுத்து அதிமுகவில் மேலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது.
