சசிகலாவின் கணவர் ம.நடராசனின் பிறந்தநாளான இன்று அமமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும், இது சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தெரியுமா? என்றும் உறவினர்கள் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் கணவர் ம.நடராசனின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் நடராசனின் உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சையில் இருந்து விளார் செல்லும் சாலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே அமைந்துள்ளது ம.நடராசன் சமாதி. சமாதியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இன்று காலையிலேயே அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் வந்து மரியாதை செலுத்தினர்.

ம.நடராசனின் பிறந்த நாளை, டிடிவி தினடகரன் தரப்பு கண்டு கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. தினகரன் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. இந்த விஷயம் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிந்துதான் இப்படி நடக்கிறதா என்று நடராஜன் உறவினர்கள் புலம்புகின்றனர்.

சசிகலாவின் ஏற்பாட்டின்படியே தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு படத்திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், அவரது 76-வது பிறந்த நாளில், டிடிவி தினகரன் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது வேதனையான ஒன்று என்று சிலர் வேதனையுடன் கூறுகின்றனர்.