Presidential Election: இதற்கிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பரூக் அப்துல்லாவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் 2022

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, டெல்லியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்க வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில், கடந்த 15 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

வெங்கையா நாயுடு 

இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மறுப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பரூக் அப்துல்லாவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்தார்.

அதேபோல மஹாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுனரும் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார். யஸ்வந்த் சின்ஹா பெயரும் அடிபட்டது. எதிர்க்கட்சி வரிசையில் இப்படியிருக்க, பாஜக தரப்பில் யார் குடியரசு தலைவராக நிறுத்தப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜகவின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்