சூழலில் விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்தித்து பேசிய சில மணி நேரங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜகாந்தை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மக்களவை தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தேமுதிக. தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார். இதனால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் சென்றார்.

 

பாஜக கூட்டணியில் விஜயகாந்தை இணைய வலியுறுத்தவே அக்கட்சியின் தலைவர்கள் ரஜினிகாந்தை அனுப்பியதாக தகவல்கள் பறந்தன. இந்நிலையில் விஜயகாந்தை சந்தித்து நலம் மட்டுமே விசாரித்தேன். அரசியல் துளி கூடப்பேசவில்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். விஜயகாந்தை சந்திக்க பாஜக அனுப்பி வைப்பதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.
 
இந்நிலையில் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். அங்கு திமுக விஜயகாந்திடம் நலம் விசாரிக்க உள்ள அவர், திமுக கூட்டணியில் இணைய வேண்டுகோள் விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.