இரண்டே மாதத்தில் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை.! தீயாய் களத்தில் இறங்கிய திமுக நிர்வாகிகள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூன் 3 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை திமுக தலைவர் கருணாநிதி இன்று தொடங்கிவைத்தார்.
உடன்பிறப்புகளாய் இணைவோம்
தமிழகத்தில் திராவிட கட்சியான திமுக- அதிமுக இடையேயான தான் போட்டியானது உள்ளது. ஒரு முறை அதிமுக வெற்றி பெற்றால், மறுமுறை திமுக ஆட்சியை கைப்பற்றும். இந்தநிலையில் இரு கட்சிகளும் தங்களை மேலும் பலப்படுத்து புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்று தொடங்கி வரும் ஜூன் 3ம் தேதி வரை "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் நடைபெறவுள்ள உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
களத்தில் இறங்கிய திமுக நிர்வாகிகள்
இரண்டு மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சேர்க்கை முகாம்கள், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த அந்த பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்தவேண்டும். உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25 ஆகும். உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.
திமுகவில் யார்.யார் இணையலாம்
உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண், புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை நகல் எடுத்து இணைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்கவுள்ள பணிக்காக திமுகவினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையை குறி வைக்கும் பாஜக..! தன் மகனுக்காக அலறும் ஜெயக்குமார்