வீடு மற்றும் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அளவுடன் பிள்ளை பெற்று அழகு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என திருமணமான இணையருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

திருமணத்தை நடத்திய முதலமைச்சர்

தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண நிகழ்வில் தங்கத்திலான தாலியுடன் 70 ஆயிரம் மதிப்பிலான 30 சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைப்பது எனக்கு மகிழ்ச்சியை மனநிறைவை தருவதாக கூறினார்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்பட்டு வருகிறோம் என்றும் தமிழகம் முழுவதும் இன்று 217 பேருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் தான் அமைச்சரை வேலை வாங்குவார். ஆனால் முதல்வரை வேலை வாங்கும் அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு உள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு அமைந்து அறநிலையத்துறை 3700 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளதாகவும் கூறினார். 

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ,எம்பி, அமைச்சராகி விட்டனர்- ஆர் எஸ் பாரதி வேதனை

மதத்தை வைத்து அரசியல்

மேலும்,அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றோம். இச்சாதனைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம். இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால் தான் அவர்கள் பொய், பித்தலாட்டத்தை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக்கொண்டிருப்பதாக கூறினார். நாம் இருவர் நமக்கு மூவர் என்ற நிலை மாறி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம் என்ற முதல்வர்,மேலும் வருங்காலத்தில் நாம் இருவர் நமக்கு ஏன் மற்றொருவர் என்ற நிலை வர கூடும் என்று எச்சரித்தார். 

கோவை செல்வராஜை நீக்கிய ஓபிஎஸ்..! புதிய மாவட்ட செயலாளரை நியமித்து அதிரடி

தமிழில் பெயர் வையுங்கள்

அது மட்டுமல்ல நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்று கூட நான் விளம்பரம் ஒன்றை பார்த்ததாகவும் கூறினார். மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் தொகை கட்டுப்படுத்த அதிக அளவில் செலவு செய்து வருகிறது. இவையெல்லாம் கருதி நாட்டின் நலன் கருதி வீட்டின் நலன் கருதி அளவுடன் குழந்தை பெற்று அழகு தமிழில் பெயர் வைக்க வேண்டும என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் ,தா மோ அன்பரசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் டி ஆர் பாலு மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

இது தான் நீங்கள் கூறிய விடியல் ஆட்சியா.? வரலாற்றுப் பழியை திமுக சுமக்க நேரிடும்.! எச்சரிக்கை விடுக்கும் சீமான்