மத கலவரத்தை தூண்ட சதி.! ஆட்சியை அகற்ற திட்டம் -பாஜகவிற்கு எதிராக தேசிய தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்- ஸ்டாலின்
தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சிக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகம் முன்பு உள்ள 14.5 அடி உயரம் உள்ள கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலையை உருவாக்கிய மீஞ்சூர் சிற்பி தீன தயாளனுக்கு முதல்வர் ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகிறது. இந்த காலங்களில் திமுக ஆட்சி ஆற்றிய பணிகளை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. இந்த ஆட்சியை பார்த்து பாராட்டக்கூடியவர்கள், வாழ்த்து தெரிவிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். தமிழர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் நம்மை வாழ்த்துகின்றனர்.
சவால் விட்ட அண்ணாமலை.! விசாரணைக்கு அழைக்க போலீஸ் திட்டம்..? அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்
ஆட்சியை கலைக்க சதி
ஆனால் அதே நேரத்தில் நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்தில் உலவிக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். திராவிட மாடல் எனக்கூறி மக்கள் மனதில் கவர்ச்சியான கவரக்கூடிய வகையில் ஆட்சி நடத்துகிறார்களே தொடர்ந்து இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர். இதனால் கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது. மதக்கலவரத்தை தூண்டலாமா, சாதி கலவரத்தை ஏற்படுத்தலாமா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். நம் மீது கூறப்படுகின்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமர்சனங்களை வைக்கின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்துள்ளோம். தமிழகத்தில் சிறப்பான கூட்டணி அமைத்து தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளோம். இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பாஜகவிற்கு எதிராக ஒன்றினைய வேண்டும்
தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நமக்குள் இருக்கும் பிரச்னைகளை தூக்கி வைத்து விட்டு கவுரவம் பார்க்காமல் திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.எனவே அதனை செய்தால் நாட்டை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனவே அந்த பணியையும் நிறைவேற்ற போகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
நாட்டிலேயே மத பிரச்சினை இல்லாத மாநிலங்களாக தமிழகம், கேரளா உள்ளன - பினராயி பெருமிதம்