Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியில் நடப்பது ஏதாவது தெரியுதா.? மாயையிலிருந்து முதல்ல வெளியே வாங்க.. எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

"பரிசோதனைகளை விரிவாகவும் விரைவாகவும் செய்தல், தொற்றுக்கான தொடர்புகளைக் கண்டறிதல், உரிய சிகிச்சை அளித்தல் மூலமாகவே கொரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும். கொரோனா ஒழிப்பு என்ற ஒன்றைத்தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், அனைத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M.K.Stalin advice to Edappadi Palanisamy
Author
Chennai, First Published Jun 15, 2020, 8:47 PM IST

ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ, அது மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் அதிமுக அரசு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் அந்த மாயையிலிருந்து அரசு வெளியே வர வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M.K.Stalin advice to Edappadi Palanisamy
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பொது முடக்கத்தையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு எதிராக 5 கேள்விகளை காட்டமாக முன்வைத்தார்.M.K.Stalin advice to Edappadi Palanisamy
இந்நிலையில் பொது முடக்கம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முழு ஊரடங்கு அமலாகும் என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் சொன்னார். 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அவரே சொல்லி இருக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்!ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ, அது மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் அதிமுக அரசு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் அந்த மாயையிலிருந்து அரசு வெளியே வர வேண்டும்.M.K.Stalin advice to Edappadi Palanisamy
பரிசோதனைகளை விரிவாகவும் விரைவாகவும் செய்தல், தொற்றுக்கான தொடர்புகளைக் கண்டறிதல், உரிய சிகிச்சை அளித்தல் மூலமாகவே கொரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும். கொரோனா ஒழிப்பு என்ற ஒன்றைத்தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், அனைத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios