தாமரையை அஜித் ரசிகர்கள் மலரச் செய்வார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையால் மோதல்போக்கை கடைபிடித்து வந்த விஜய்- அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர்.

திருப்பூரில் தமிழிசை முன்னிலையில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் சேர்ந்தனர். அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ‘தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும். பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

 

தமிழிசை சவுந்தரராஜனின் கோரிக்கையால் அதிர்ச்சியானத அஜித் ரசிகர்களோ, விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேர்வோமே தவிர பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்கிறார்கள்.

 

சமூக வலைதளங்களில் இந்தக் கோரிக்கையை வைத்த தமிழிசை சவுந்தரராஜனை வறுத்தெடுத்து வருகின்றனர். ''நாங்க அஜித் ரசிகர்களாக இருக்கலாம். என்றுமே நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வு மாறாது. நீங்க என்ன தான் தலைகீழ் நின்றாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது'' என ஒருவர் தெரிவித்துள்ளார்.

’நாங்க விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேருவோமே தவிர பிஜேபி க்கு ஒருநாளும் பிரச்சாரம் செய்யமாட்டோம்’ எனவும், ’’தல ரசிகர்கள் வெறித்தனமானவர்கள் தான், அந்த வெறித்தனம் தல க்கும், தமிழுக்குமே இறுதிவரை இருக்குமே தவிர எக்காலத்திலும் மதவெறி கூட்டத்தின் பக்கம் சாயாது. நாங்கள் மனிதநேயர்கள்’’ எனக் கூறியுள்ளனர்.

 

நம்ம சன்பிக்ஸர கிண்டல் பண்ணுனதால மூதேவி நைஸா நம்மகிட்ட ஒட்டி "தல" பேர கெடுக்கபாக்குது. எனவும் யாரோ இந்தம்மாகிட்ட அஜித்த பத்தி பேசுனா ரசிகர்கள் எல்லாம் தாமரை சின்னத்தில் ஓட்டு போட்ருவாங்கனு நம்ப வச்சுருக்காங்க போலமா..’’ எனவும் தெரிவித்துள்ளனர்.

 

’’அஜித் ரசிகர்கள் - நாங்க ரசிகர்மன்றத்த கலச்சிடுறோம்... நாங்க விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேருவோமே தவிர பிஜேபி க்கு பிரச்சாரம் செய்யமாட்டோம். கடல் தண்ணீரும் உப்பு தான்.. கண்ணீரும் உப்பு தான்.. Bjb க்கு வைக்க போரோம் ஆப்பு தான்..’’ என்கிற வகையிலான பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.