Asianet News TamilAsianet News Tamil

சிபிஐ சோதனையில் இது ஒரு சாதனையாக இருக்கக்கூடும்.. அசராமல் பங்கமாய் கலாய்க்கும் கார்த்தி சிதம்பரம்.!

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Lost count, says Karti Chidambaram after CBI raids homes
Author
Chennai, First Published May 17, 2022, 10:03 AM IST

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிபிஐ இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை என எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எத்தனை முறை சோதனை செய்தனர் என்ற கணக்கு மறந்துவிட்டதாகவும், சிபிஐ சோதனையில் இது ஒரு சாதனையாக இருக்கக்கூடும் என கார்த்தி சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios