நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுத்தது எனவும் அனிதா பயப்படமால் இருந்திருக்கலாம் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். 

இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. 

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் தம்பிதுரை நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக குரல் கொடுத்தது எனவும் அனிதா பயப்படமால் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். 
மேலும் அனிதாவின் இழப்பு வேதனைக்குறியது எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.