உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மேலும், மாநில அரசுகள் ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நின்றுடன் நிறைவடைகிறது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளன. தமிழகமும், ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இம்முறை ஊரடங்கை நீட்டித்தாலும், முன்பு போல் ஒட்டுமொத்தமாக முடக்காமல், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலமாக பிரித்து ஊரடங்கை பகுதி அளவு தளர்வுடன் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 2 முறை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி உள்ளனர். ஒருமுறை வீடியோ செய்தியை வெளியிட்டார். இதனையடுத்து, 4வது முறையாக பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். முதலில் அம்பேத்கருக்கு புகழாராம் சூட்டி பிறகு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அம்பேத்கர் வாழ்க்கை முறை பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க நமக்கு கற்று கொடுத்து இருக்கிறது. சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம்.

மேலும், ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது. ஆனால், கொரோனா தடுப்பில் மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மேலும், மாநில அரசுகள் ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
