Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.? சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி பதில். பிரச்சார பொதுக்கூட்டத்தால் கொரோனா.

தற்போது அரசியல் பிரச்சாரங்களில் கூட்டம் கூட்டமாக பங்கேற்று உள்ளனர் இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது என்று கூறினார் .

Lock down again in Tamil Nadu.? Health Secretary Action Response. Corona by the campaign public.
Author
Chennai, First Published Mar 17, 2021, 11:22 AM IST

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் எடுக்கப்பட்டு உள்ளது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவலை கட்டுபடுத்த மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட அட்சியர்களிடம் விரிவாக தெரிவித்துள்ளார். கேரளா ,மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதில் தமிழகமும் ஒன்றாக உள்ளது, தமிழகத்தில் ஒரே நாளில் 7000 நபர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலை மாறி தற்போது 1000 நபர்கள் ஒரு நாளுக்கு பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. இது மிகவும் கவலை அளிக்க கூடிய நிலை எனவே பொதுமக்கள் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது மூலம் பாதிப்பை கட்டுபடுத்த முடியும் என்று கூறினார்.

Lock down again in Tamil Nadu.? Health Secretary Action Response. Corona by the campaign public.

தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரித்து வருவது குறித்து ஆய்வு செய்ததில் பிப்ரவரி மாதத்தில் பிறந்த நாள் விழா ,திருமண விழா நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது  என்றும் இந்த மாதத்தில் தற்போது அரசியல் பிரச்சாரங்களில் கூட்டம் கூட்டமாக பங்கேற்று உள்ளனர் இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது என்று கூறினார். பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும், தற்போது மீண்டும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு உள்ளது என்று கூறிய அவர் பொதுமக்கள் அதனை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Lock down again in Tamil Nadu.? Health Secretary Action Response. Corona by the campaign public.

தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு உள்ளனர் எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். சென்னை,கோயம்பத்தூர் செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,தஞ்சாவூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். 

Lock down again in Tamil Nadu.? Health Secretary Action Response. Corona by the campaign public.

சென்னையை பொறுத்தவரை தேனாம்பேட்டை ,அண்ணா நகர் ,அம்பத்தூர்,அடையார்,வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் ,தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே பரவி வந்த கொரோனா நோயே தற்போதும் உள்ளது என்று கூறிய அவர் புதிதாக வேறு விதமாக எந்த கொரோனா நோயும் தமிழகத்தில் தற்போது வரை பரவவில்லை என்று கூறினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios