Asianet News TamilAsianet News Tamil

BREAKING: தொடங்கியது ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… முடிவுகளை உடனே அறிவிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவித்தபடி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.

Local election counting starts
Author
Chennai, First Published Oct 12, 2021, 7:59 AM IST

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவித்தபடி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.

Local election counting starts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் ஏற்பட்ட சலசலப்புகளை தவிர பெரும்பாலும் இரண்டு கட்டங்களிலும் வாக்கு பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.

140 மாவட்ட கவுன்சிலர், 1381 ஒன்றிய கவுன்சிலர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 41,500 ஓட்டு பெட்டிகள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன.

Local election counting starts

இந் நிலையில் அறிவித்தபடி இன்று காலை 8 மணிக்கு 74 ஓட்டு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளே மற்றும் வெளியே சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு உள்ளன.

கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சீட்டுகள் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டதால் முடிவுகள் தெரிய காலதாமதமாகலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios