தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பிறகு கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

இதையும் படிங்க;-  கணவர் இல்லாத நேரத்தில் பல ஆண்களுடன் உல்லாசம்... வெறியில் இளம்பெண்ணை எரித்து கொன்ற கள்ளக்காதலன்..!

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை இந்த இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்தது. தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. 

மேலும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று அரசியல் கட்சியினரும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரையாண்டு தேர்வை டிசம்பர் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.