தூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கவிதா (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து தூத்துக்குடியில் தனியாக வசித்து வந்தார். அப்போது, எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில், வேலைக்கு சென்ற எட்வின் மறுநாள் காலை விடு திருப்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது கவிதா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சரக்கு வாகன ஓட்டுநரான கருப்பசாமி என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இரவு இருவரும் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் கவிதாவை கருப்பசாமி எரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.