இந்தி தெரிந்தால்தான் வங்கி லேன் கிடைக்கும் என்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பேசியதாகவும், எனவே அவரின் பேச்சை கண்டித்தும், அவரை உடனே இடம் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் திமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கரன் தெரிவித்துள்ள தாவது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. அந்த வங்கியில்  வாடிக்கையாளராக உள்ள டாக்டர் பாலசுப்ரமணியன் வீட்டுக் கடன் கேட்டு சென்றுள்ளார். வங்கி மேலாளரான வட இந்தியர், டாகடரிம் "இந்தி தெரியுமா?",என்றுக்கேட்டுள்ளார். 

"இந்தி தெரியாது. தமிழும், ஆங்கிலமும் தான் தெரியும்", என ஆங்கிலத்தில் டாக்டர் பாலசுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதற்கு, "நான் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன்", என பதில் சொல்லியிருக்கிறார் வங்கி மேலாளர். "அதனால் என்ன, எனக்கு கடன் கொடுங்கள்", என்றிருக்கிறார் டாக்டர். அதற்கு பதிலாக,"இந்தி தெரியாவிட்டால் கடன் கொடுக்க இயலாது", என வங்கி மேலாளர் கடுகடுவென கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பணிபுரிய வந்த ஒருவர் தமிழ் கற்றுக் கொள்ளாமல், இங்கே இருப்போருக்கு இந்தி தெரியாததால் கடன் கொடுக்க மறுப்பது திமிர்தனம் ஆகும்.  டாக்டர் பாலசுப்ரமணியன் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஆவார். அந்த வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர் ஆவார். படித்த ஒருவரையே இந்தி தெரியவில்லை என அவமானப் படுத்தினால், படிக்காத பாமரர்கள் வங்கிக்கு சென்றால் என்ன பாடுபடுத்தி இருப்பார் இந்த வங்கி மேலாளர். 

செய்தி அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், உடனே வங்கி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஆணையிட்டார்கள்.  கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக, ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில், கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் முன்னிலையில் வங்கி மேலாளரின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்தும், அவரை உடனே இடம் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மருத்துவர் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.