உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது... துரைமுருகனை வெளுத்து வாங்கிய சுதீஷ்..!

தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம். அரசியல் காரணங்கள் இல்லை என தேமுதிக மாநில நிர்வாகி இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். 

LKSudhish press meet

தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம். அரசியல் காரணங்கள் இல்லை என தேமுதிக மாநில நிர்வாகி இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். 

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் தேமுதிகவின் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தேமுதிக மாநில நிர்வாகிகள் ஏ.ஆர்.இளங்கோவன், அனகை முருகேசன், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு வந்தனர். துரைமுருகனைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 LKSudhish press meet 

பின்னர் வெளியில் வந்த ஏ.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களிடம், துரைமுருகனைத் தனிப்பட்ட முறையில்தான் சந்தித்தோம். அரசியல் ரீதியாகச் சந்திக்கவில்லை, என்றார். பின்னர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் என்னோடு தொலைபேசியில் பேசினார். என்ன விஷயம் என்று கேட்டேன். அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, திமுகவுடன் வர விருப்பப்படுகிறோம் எங்களுக்குச் சீட் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லை. இரண்டாவது உங்களுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் சீட் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம் என்று கூறினேன்.  LKSudhish press meet

பின்னர் தேமுதிகவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்களிடமும் அதையேதான் சொன்னேன். எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை. கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி ஸ்டாலின் தான் முடிவு செய்வார். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம் என்றார்.   

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன் மற்றும் சுதீஷ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்தோம். அரசியல் காரணங்கள் இல்லை என்று விளக்கம் அளித்தனர். துரைமுருகனை சந்தித்த போது திமுக கூட்டணியில் இணைக்குமாறு கூறவில்லை என்றார். LKSudhish press meet

துரைமுருகன் தொடர்பாக செய்தியாளர்கள் சுதீஷிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் சில நாட்களுக்கு முன்னர் துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசிய உண்மை. நாகரீகம் கருதி துரைமுருகன் திமுக குறித்தும், திமுக தலைமை குறித்தும் பேசியதை நாள் வெளியிடமாட்டேன. மேலும் உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது என்றார். ஒரே மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். தனிப்பட்ட காரணங்களுக்காக, துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தனர் என்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் விளக்கமளித்துள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios