டி.டி.வி.தினகரனை கழற்றிவிட்ட தேமுதிக... கூட்டணியை உறுதி செய்த விஜயகாந்த்..!

https://static.asianetnews.com/images/authors/f71a4c12-3caf-58c5-bcf5-5f738e9fba48.jpg
First Published 7, Feb 2019, 11:37 AM IST
LK Sudhish says DMDK Alliance talks with BJP
Highlights

மக்களவை தேர்தலுக்காக நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 

மக்களவை தேர்தலுக்காக நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக பேசிய எல்.கே.சுதீஷ், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். மக்களவை தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த மக்களவை தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்’’ என அவர் தெரிவித்தார். பாஜகவுடன் தேமுதிக கடந்த சில தேர்தல்களில் நட்புடன் இருந்து வருகிறது. அத்தோடு எந்தக் கட்சியும் கூட்டணி உறுதியாவதற்கு முன்பே குறிப்பிட்ட கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அறித்தால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவது உறுதி என்பதை கடந்த கால அரசியல் சம்பவங்கள் வைத்து உணரலாம்.

டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைக்க தேமுதிக விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியிருப்பது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 
 

loader