ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் சென்னை மாநகராட்சி இணைந்து நிவாரண உதவி செய்வதற்கு ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

#ChennaiCorpRemoveRSS என்கிற ஹேஸ்ட்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி வழங்கியதாக கண்டனங்கள் கிளம்பி வருகின்றன. 

இதுகுறித்து, ‘’தெருவில் குப்பைகளை அள்ள, தெருவை சுத்தம் செய்ய, பொதுகழிப்பிடத்தை சுத்தம் செய்ய, குப்பை லாரிகளை இயக்க தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பயன்படுத்தலாம். இதை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் டவுஸர் போட்டுகொண்டே செய்யட்டும்

மற்ற வேலைகளை அரசு ஊழியர்கள் பார்த்துகொள்வார்கள்.எங்கள் வீட்டில், தெருவில், ஊரில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், குழந்தைகள் இருக்கிறார்கள். எங்கள் பெண்கள் இந்த குற்றவாளிகளை ஏற்க மாட்டார்கள் என்பதை சென்னை மாநகராட்சி கவனத்தில் கொண்டு இந்த அபாயகரமான போக்கை கைவிடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கும்பல்ககள் என்ன மனிதநேய காவலர்களா?சென்னை மாநகராட்சிக்கு வண்மையான கண்டனங்கள்’’ என நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.