கர்நாடகாவில் சிறப்பு மண்டல பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை  37, 776 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவியவர்களில் 1018 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை 1, 223 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், பச்சை மண்டல பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு, தான் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  நாளை முதல் கர்நாடாகவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில கலால் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிவப்பு மண்டல பகுதிகளை தவிர மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும். ஆனால், மதுக்கடைகளில் பார்கள் திறக்கப்படாது. அனைவரும் மூன்று அடி சமூக இடைவெளி விட்டு மது வகைகளை வாங்கிச் செல்லலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.