அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்திலுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே  நிலவக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், 23-1-2021 முதல் 26-1- 2021 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடனும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் கடவூரில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், மூங்கில்துறைப்பட்டு 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.