Lets make a big statue for Shivaji Actor Kamal

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகப்பெரிய சிலை செய்ய உள்ளதாகவும், மிகப்பெரிய அளவில் விழா எடுப்போம் என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணி மண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார்.

சிவாஜி கணேசன் குறித்த புகைப்பட கண்காட்சியும் திறக்கப்பட்டுள்ளது. மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நாசர், விஜயகுமார், தமிழக அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை, மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை, சிவாஜி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

சிவாஜி மணிமண்டம் குறித்து நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், செவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றும் இதைவிட பெரியதாகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை செய்ய உள்ளதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.