Asianet News TamilAsianet News Tamil

சிசிடிவி புட்டேஜ் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு விஜய்சேதுபதிக்கு கச்சேரி ...! போட்டுத்தாக்கும் மகா கந்தி.

அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியினரை வெண்ணை என்று அவர் பேசிதுபோல பலப்பல வார்த்தைகளையும் எனக்கு எதிராக பேசிவிட்டுப் போனார். அதே நேரத்தில் இந்த விவகாரம்  எப்படி கைகலப்பாக மாறியது என்ற கேள்விக்கு பதிலளித்த மகா காந்தி, அந்த இடத்தில் வாய் வார்த்தைகள் வாக்குவாதம் முடிந்த நிலையில் லக்கேஜ் எடுக்க வெளியில் வந்தேன், 

Let the CCTV footage be available, then there will be a concert for Vijay Sethupathi ...!  Maha Gandhi Warning.
Author
Chennai, First Published Nov 8, 2021, 2:57 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், அவரை ஏன் தாக்கினேன் என்பது குறித்து சம்பந்தப்பட்ட நபர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய பெயர் மகா காந்தி என்றும் தான் தமிழன்தான் என அவர் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி,  இளைஞர்கள், பெண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி  எப்போதும் பிஸி மோடில் இருந்துவரும் அவர், தன் வெளிப்படையான பேச்சால் அடிக்கடி  சர்ச்சையில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அவர் பெரியாரிய கருத்துக்களையும் முற்போக்கான கருத்துக்களையும் கூறி வருவதால் அவர் பாஜக மற்றும் இந்துத்துவ வாதிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். அதேபோல நாம் தமிழர் கட்சியினரையும் அவர் விமர்சித்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நவம்பர் 3ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் தனது உதவியாளர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாவலர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்னால் இருந்து ஒரு நபர் தாக்குவது போன்ற பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியானது. அதில் யாரோ ஒரு நபர் விஜய்சேதுபதியை பின்னால் இருந்து எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது பலரையும் அதிர்ச்சி  அடைய வைத்தது. நடிகர் விஜய் சேதுபதியை எதற்காக அந்த நபர் தாக்கினார், அவர் யார் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளுக்கு எழுப்பி வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த பெங்களூர் போலீசார், விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பெங்களூர் விமான நிலையத்தில் எந்த ஒரு வழக்கும் பதிவாகவில்லை, அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து தாக்கப்பட்டது விஜய்சேதுபதி அல்ல, அவருடைய உதவியாளர்தான் என தகவல்கள் வேகமாக பரவியது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் தெளிவான பதில் கிடைக்காமல் விஜய்சேதுபதியின் ரசிகர்களும், தமிழக மக்களும் குழப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை தாக்கியது தான்தான் என சம்பந்தப்பட்ட நபர் யூடியூப் சேனஙுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Let the CCTV footage be available, then there will be a concert for Vijay Sethupathi ...!  Maha Gandhi Warning.

அதில் தன்னுடைய பெயர் மகா காந்தி என்றும், சமீபத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது அவர் தேசிய விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து கூறியதாகவும், ஆனால் விஜய் சேதுபதி அப்போது தன்னை தவறாகப் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு, என் பெயர் மகா காந்தி, நான்தான் விஜய்சேதுபதியை தாக்கினேன், அதற்கு பல காரணங்கள் உள்ளது, சமீபத்தில் விமானநிலையத்தில் விஜய்சேதுபதியை சந்தித்தபோது, தேசிய விருது பெற்றதற்காக வாழ்த்துக்கள் என கூறினேன், ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக இது ஒரு தேசமா என கேட்டார், அவர் அவ்வாறு கேட்டது என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. அப்போது குறுகிட்ட அந்த செய்தியாளர், நீங்கள் முத்துராமலிங்கத்தேவரின் வழியைப் பின்பற்றுகிறீர்கள்  என்பதை அவரிடம் சொல்லி தான் அப்படி கேட்டீர்களா கைட்கிறார், தொடர்ந்து பேசும் மகா காந்தி, குருபூஜைக்கு வந்தீர்களா என்று கேட்டேன் அதற்கு விஜய் சேதுபதி குருன்னா யார் என்று கேட்டார், நீ சொல்ற ஆளு ஜூவிஸ் கார்பெண்டர்  என்று சொல்லிவிட்டு  போகிறார். அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியினரை வெண்ணை என்று அவர் பேசிதுபோல பலப்பல வார்த்தைகளையும் எனக்கு எதிராக பேசிவிட்டுப் போனார்.

Let the CCTV footage be available, then there will be a concert for Vijay Sethupathi ...!  Maha Gandhi Warning.

அதே நேரத்தில் இந்த விவகாரம்  எப்படி கைகலப்பாக மாறியது என்ற கேள்விக்கு பதிலளித்த மகா காந்தி, அந்த இடத்தில் வாய் வார்த்தைகள் வாக்குவாதம் முடிந்த நிலையில் லக்கேஜ் எடுக்க வெளியில் வந்தேன், அப்போது விஜய்சேதுபதி உடனிருந்த (பாஸ்டர் ஜான்சன்) மற்றும் அவருடன் இருந்த இன்னொருவர் இரண்டு பேரின் கை மட்டும் தான் வந்தது... விரைவில் நான் ஆர்டிஐ யில் விமான நிலையத்தில் அப்போது பதிவான வீடியோ காட்சிகளை வாங்கிவிடுவேன், அவரை கேரளர், கன்னடகாரர்கள் தாக்கிவட்டார்கள் என்று சொல்கிறார்கள், தமிழன் மகா காந்தி நான்தான் அடித்தேன், அவர் என்னை அடித்ததால் நான் அடித்தேன் என மகா காந்தி கூறியுள்ளார். விஜய் சேதுபதி இது தேசமா என்று கேட்டது மட்டுமல்லாமல், முத்துராமலிங்க தேவரை ஜூலியஸ் கார்பெண்டர் என்று  கூறியதால் இந்த மோதல் நடந்திருப்பதாக மகா காந்தி பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதி உடனிருந்தவர்கள் தன்னை தாக்கியதால் தானும் பதில் தாக்குதல் நடத்தியதாக மகா காந்தி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios