அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டி என்ற ஊரில் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அம்மாணவி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மதமாற்றம் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும், இது இத்துடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ஆனால் மாறாக மாணவி உயிரிழந்த விவகாரத்தை திசை திருப்ப திமுக அரசு முயற்சி செய்கிறது என பாஜக முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த மாணவி லாவண்யாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி இருக்க வேண்டும், ஆனால் ஏன் அவர் அப்படி செய்யவில்லை என்றும் விஜய சாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டி என்ற ஊரில் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அம்மாணவி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பள்ளி நிர்வாகத்தால் மாணவி மதமாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அண்ணாமலை பதிவிட்டிருந்தார். இதனால் அந்த வீடியோ வைரல் ஆனது. தமிழகத்தில் மதமாற்றம் வேகமாக நடக்கிறது, அதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டிய பாஜகவினர் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினர்.

ஆனால் பாஜக மாணவியின் விவகாரத்தை வைத்து மத அரசியல் செய்கிறது, சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்று திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கிடையில் அந்த மாணவி பேசியதாக முழு வீடியோ ஒன்று வெளியானது. அதில் எந்த இடத்திலும் மாணவி தான் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்த பட்டதாக கூறவில்லை, கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்த பட்டாயா என்ற கேள்விக்கும் அந்த மாணவியின் மறுத்துவிட்டார். செந்தூர் பொட்டு அழிக்க தன்னிடம் யாரும் வற்புறுத்தியதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காத காரணத்தாலேயே விஷம் குடித்த தாகவும் அவர் கூறினார். மொத்தத்தில் மதமாற்றம் செய்ய சொல்லி மாணவியை எவரும் துன்புறுத்தவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது. ஆனாலும் மாணவி விவகாரம் தொடர்ந்து பேசுபொருளானது.
இதனால், அந்த மாணவி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பாஜக தேசிய தலைவர் முன்னாள் எம்பியும் நடிகை விஜயசாந்தி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் அந்த குழு விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய சாந்தி மாணவி மதம் மாறச் சொல்லி வற்புறுத்தபட்ட நிலையில் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மொத்தத்தில் மாணவிக்கு கொடுமை நடந்துள்ளது. இவ்வளவு நடந்தும் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்.? யாரைக் காப்பாற்ற அவர் முயற்சி செய்கிறார். சம்பவத்தை திசை திருப்ப அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இந்நிலையில் மீண்டும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் விஜயசாந்தி, உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்றோம், அவரின் பெற்றோர்களை சந்தித்து விசாரணை நடத்தினோம், அவரது சித்தியிடம் குறுக்கு விசாரணை செய்தோம், நாங்கள் விசாரித்த வரையில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடந்திருக்கிறது.

மாணவி பேசியதாக நான்கு வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில், அதில் ஒரு வீடியோவில் அதற்கான ஆதாரம் உள்ளது. மதமாற்றம் செய்ய மாணவி நிர்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை. அதனால்தான் நட்டா அவர்கள் நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பி இருக்கிறார். விரைவில் இதற்கான ஆதாரத்தைத் நட்டாவிடம் வழங்க இருக்கிறோம். அந்த மாணவியின் தந்தை திமுகவை சேர்ந்தவர். திமுக அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி என்ன பிரச்சனை என கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, பிரச்சனை இந்து பெண்ணுக்கு தான் நடந்திருக்கிறது, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும்தான் தனக்கு முக்கியம் என அவர் நினைக்கிறார்.
பாதிக்கப்பட்டது இந்துப்பெண், எதிர்தரப்பில் இருப்பது கிறிஸ்தவப் பள்ளி, அதனால் அந்த கிறிஸ்தவ பள்ளிக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த அரசு பிரச்சினையை திசை திருப்புகிறது. அந்த மாணவி நன்கு படிக்கும் மாணவி என்பதை தெரிந்து. அந்த மாணவியை மதம் மாற்றி அதன் மூலம் நல்ல பெயர் எடுக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்திருக்கிறது. இந்த பள்ளியில் நடந்தது போல தமிழகத்தின் பல பள்ளிகளிலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மதமாற்றம் என்பது அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
