வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளதாக என நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு;- வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது. ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒத்துக் கொண்டதால் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது. 

பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகின்றது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தை அனைவரும் படித்து பார்க்க வேண்டும். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விசயத்திற்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது. 

10 ஆண்டுகளில் திமுக - காங்கிரஸ் மக்களின் பிரச்சனைகளை பேசவில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்த்து இருந்தால் திமுக - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்கும்.  முத்தலாக் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே. பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிருவேன் என எனக்கு தெரியாது. எம்.எல்.ஏ சீட்டுக்காக நான் கட்சியில் இருக்க மாட்டேன். அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் எதிர்க்கவில்லை. யார் முதல்வர் வேட்பாளர் என்பதை 2 தலைமைகளும் பேசி மட்டுமே முடிவு செய்யும்., ஜே.பி.நட்டாவும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பேசி முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என கூறினார்.