தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் தொடங்கியது. அப்போது, ஜெயலலிதா துணிச்சலான தலைவராக விளங்கியவர் என கவர்னர் கூறினார்.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 2017ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா துணிச்சலான தலைவராக விளங்கியவர். இவர் பெண்கள், குழந்தைகள், ஏழை மக்களுக்காக கொண்டு நலத்திட்ட உதவிகள் மகத்தானவை என அவர் பேசினார்.

இதற்கிடையில், கவர்னரின் உரையை புறக்கணித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.