2017ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல் உரையாற்றி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கியது.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ச இரங்கல் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இரங்கல் தீர்மானத்தை வாசித்த முதல்வர் ஒ.பி.எஸ்., தமிழக முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அந்த தினம், உலகத் தமிழர்கள் நிலைகுலைந்த நாள். டிசம்பர் 5ம் தேதி இருண்ட தினம்.

மேலும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் அவர்தான். ஜெயலலிதா மாநிலங்களவை எம்பியாக இருந்தபோது, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டுகளை பெற்றவர் என பேசினார்.