தமிழக சட்டப்பேரவை தேர்தல் டிசம்பருக்குள் வரும் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கஜினி முகமது போரில்  17 முறை  படையெடுத்து தோல்வியடைந்தார்.  ஆனால் அவரின் விட முற்சியால் 18-வது முறையாக படையெடுத்த போது வெற்றி பெற்றார். அதேபோல்  துரைமுருகன் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறும் என தொடர்ந்து கூறி வருகிறார். 

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் கொண்டு வரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரு தேர்தல்களும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என கூறினார். இதற்கு முன்னதாக 21 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தருவது உறுதி என துரைமுருகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.