சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். செயல்தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்ட தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு துரைமுருகன் வழிமொழிந்தார்.

மு.க.ஸ்டாலின் பள்ளி பருவத்தில் படிக்கும் போதே திமுகவில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகளை பார்த்து, கட்சி பணியை அவர் தொடர்ந்தார்.

முதலில் இளைஞர் மன்றத்தையும், வட்டப்பிரதிநிதி, பகுதி பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, 1980ம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர், பிறகு செயலாளர், திமுகவின் துணை பொது செயலாளர்களில் ஒருவர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், தற்போது செயல் தலைராக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், சிறு  வயது முதல் திமுகவுக்கு பாடுபட்டு உழைத்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.

இதேபோல், திமுக தலைவர் கருணாநிதிக்கு துணை நிற்கும் வகையில் தமது பணி அமையும் என்று உறுதியுடன் தெரிவித்து, செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.