Laws in the state are in disarray - M.K. Stalin
ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை இன்னும் துவங்கவில்லை என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று கூறினார்.
ஆரம்பம் முதலே ஜெயலலிதா மரணம் குடிறத்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக கூறி வருகிறது.
சட்டசபையில் நாங்கள் குட்காவை காட்டிய பிறகே அதிகளவில் சோதனை நடக்கிறது.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், குட்கா புகழ் விஜயபாஸ்கர் மாமும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
