தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, 27 மாவட்ட ஊராட்சிகளில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்,  76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வாக்குப்பதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. தினமும சுயேட்சைகள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்துவருகிறார்கள். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1,65, 659 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இறுதி நாளான இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கலாம். இன்னும் அரசியல் கட்சிகள் சார்பில் பங்கீடுகள் முழுமையாக நிறைவடையவில்லை. என்றாலும், பங்கீடுகள் நிறைவடந்த மாவட்டங்களில் இன்று அதிக அளவில் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் மீது பாளை (17-ம் தேதி)நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 19- வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றேஎ அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.