Asianet News TamilAsianet News Tamil

ஆட்சிக்கு வராதபோதே நில அபகரிப்பு புகார்... எம்எல்ஏ விடுதியில் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் கைது..!

அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

Land grab complaint...DMK Union Secretary arrest
Author
Tamil Nadu, First Published Sep 23, 2020, 6:55 PM IST

அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டம் நகர அதிமுக செயலர் தங்க கதிரவன். இவர், 17ம் தேதி, நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில், வேளாங்கண்ணியை சேர்ந்த, தி.மு.க., கீழையூர் ஒன்றிய செயலர் தாமஸ் ஆல்வா எடிசன் மீது புகார் அளித்தார். அதில், வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதியில், அரசுக்கு சொந்தமான, 50 சென்ட் இடம், ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்த மான நிலம், ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை, போலி ஆவணங்கள்தயாரித்து, மோசடி செய்துள்ளதாக கூறிஉள்ளார்.

Land grab complaint...DMK Union Secretary arrest

அதன்படி , தாமஸ் ஆல்வா எடிசன், அவரது தாயார் ஜெயமேரி, சகோதரர் மரியசூசை நிக்சன் மற்றும் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் வி.ஏ.ஓ., கலைசெழியன் உட்பட 6 பேர் மீது நில அபகரிப்பு போலீசார்  8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கி இருந்த தாமஸ் ஆல்வா எடிசனை நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios