Asianet News TamilAsianet News Tamil

லலிதா ஜூவல்லரி: பிரபல நகை கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.!

பிரபல கொள்ளையன் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களையும் விட்டுவைக்காதவன் முருகன். இவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் சிக்கிய முக்கிய குற்றவாளியான இவன் இன்று உயிரிழந்தார்.
 
Lalita Jewelery: Famous jewelery robber Murugan dies!
Author
Tamilnadu, First Published Oct 27, 2020, 9:36 AM IST

 பிரபல கொள்ளையன் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களையும் விட்டுவைக்காதவன் முருகன். இவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் சிக்கிய முக்கிய குற்றவாளியான இவன் இன்று உயிரிழந்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் லலிதா ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி திருப்பூர் முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Lalita Jewelery: Famous jewelery robber Murugan dies!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கில், முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முருகன் கொடுத்த தகவலின் படி நகைகள் மீட்டெடுக்கப்பட்டன. இந்த கொள்ளை மட்டுமல்லாது சென்னையில் 12 மற்றும் கர்நாடகாவில் 46 வழக்குகளில் சிக்கிய பிரபல கொள்ளையன் தான் இந்த முருகன்.உடல்நலக்குறைவுடன் இருந்த முருகனுக்கு கடந்த மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் மீதான பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே, அவரது உடல்நிலை மோசமாகவே அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 6 மாதமாக சிகிச்சை பெற்று வந்த முருகன், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios