பாஜகவின் வேல் யாத்திரையின் இரண்டாவது கட்ட சுற்றுப் பயணம் இன்று காலை எல். முருகன் இல்லத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும், இன்று மாலை 4 மணி அளவில் எல்.முருகன் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்க உள்ளதாகவும் தமிழக பாஜக அறிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள தகவல் பின் வருமாறு:- 

தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் தலைமையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்து மதத்துக்கு எதிராக,
தமிழ் கடவுள்களுக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற , உருவாக்கப்படுகின்ற மோசமான பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் வகையிலும், கோரோனா தொற்றுநோய் காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து அரும்பாடுபட்டு உழைத்த சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும்,  நடைபெற்றுவரும் மாபெரும் (வேல் யாத்திரை) வெற்றி யாத்திரையின் இரண்டாம்கட்ட சுற்றுப்பயணமாக இன்று  காலை 10.30 மணி அளவில் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் தன் வீட்டிலிருந்து புறப்பட உள்ளது. 

இன்று மாலை 04.00 மணி அளவில் திருவண்ணாமலையில்அண்ணா சிலை அருகே நடைபெற உள்ள மாபெரும் வெற்றி யாத்திரை நிகழ்ச்சியில் அவர் பங்கு கொள்கிறார். அங்கிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் திருவண்ணாமலை கோவிலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் பாதையில் யாத்திரை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென திருவண்ணாமலையில் உள்ள திருவண்ணாமாலையாரை தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.