Asianet News TamilAsianet News Tamil

‘அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்’... கேட்ட சீட் கிடைக்காததால் கொந்தளித்த எல்.கே.சுதீஷ்...!

ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாதை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

L.K Sudhish talk about  DMDK - ADMK Alliance broken
Author
Chennai, First Published Mar 9, 2021, 2:08 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருப்பது உறுதியானது. பாஜகவிற்கு 20, பாமவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக கருதப்பட்ட தேமுதிகவிடம் மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தேமுதிக  முதலில் 41 தொகுதிகளைக் கேட்ட நிலையில், பின்னர் 25 தொகுதிகள் வரை இறங்கி வந்தனர். ஆனால், தேமுதிகவிற்கு 13 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் தர அதிமுக முன்வந்ததாக கூறப்பட்டது.  

L.K Sudhish talk about  DMDK - ADMK Alliance broken

ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாதை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக கூறும் தொகுதிகளை தேமுதிக ஏற்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விஜயகாந்த் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

L.K Sudhish talk about  DMDK - ADMK Alliance broken

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சதீஷ், நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கேப்டன் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இன்று தேமுதிக தொண்டர்களைப் பொறுத்தவரை தீபாவளி. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழப்பார்கள். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பிங் செல்லாக வேலை பார்த்து வருகிறார் என ஆவேசமாக தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios